தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: 2022 -ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டது . இதனையடுத்து ஆன்லைன் வாயிலாக மார்ச் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஏப்ரல் 26-ம் தேதி விண்ணப்பங்கள் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அப்போது அசிரியர் தகுதித் தேர்வின் 2-ம் நாளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளுக்கான தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.

இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதி பின் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், பின்னர் ஜனவரி மாதம் 31.01.2023 முதல் பிப்ரவரி மாதம் 12.02.2023 வரை உள்ள தேதிகளில் தாள்- II ற்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தபடும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளலாம் என்றும், தேர்வுக்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (Admit card) வழங்கும் விவரம் ஜனவரி 3-ம் வாரத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பல மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான 2-ம் தாள் தேர்வு கணினி வழியில் இன்று நடைபெற்று வருகிறது.