கொரோனோ நோயாளிகளுக்கு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியே சிறந்தது; அதிகாரிகள் தகவல்

தடுப்பூசி குறித்து அதிகாரிகள் தகவல்... இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளுக்கு அஸ்ட்ரா ஜெனெகா-ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை செலுத்துவது மிகச் சிறந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்த இறுதி முடிவு எட்டப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக ஒரு பயனுள்ள தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை தற்போது பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி தேவையில் 20 சதவீதத்தை வழங்க உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அவர்கள் எந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பார்கள் என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அசேல குணவர்தன கூறியுள்ளார். தற்போதைய மாறுபாடு முதல் அலைகளை விட மிகவும் கடுமையானதாக இருந்தாலும் அறிகுறிகள் முன்னரை விட குறைவானதாக இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.