ஜான் ஹியூமினின் உடல் செயின் யூஜின் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது

வடக்கு அயர்லாந்தின் பிரபல அரசியல்வாதியான ஜான் ஹியூமினின் இறுதி சடங்கிற்கு முன்னதாக, அவரது உடல் லண்டன்டெரியில் உள்ள செயின்ட் யூஜின் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எஸ்.டி.எல்.பி உறுப்பினர்கள் திங்கட்கிழமை, இறந்த தங்கள் முன்னாள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றினர். செவ்வாய்க்கிழமை மாலை அவரது சொந்த நகரத்தின் வீதிகளில் வரிசையாக நிற்பதைத் தவிர்க்குமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு பதிலாக, மக்கள் தங்கள் வீடுகளில் அமைதிக்கான மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டனர். முன்னாள் எஸ்.டி.எல்.பி தலைவர் ஜான் ஹியூமிற்க்கு உலக தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் டவுனிங் வீதியில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டுள்ளதாக டுவீட் செய்தார். இது அமைதியின் சின்னம் என்றும் ஹியூம் பாதுகாப்பதில் மிகவும் கருவியாக இருந்தார் என்றும் பதிவிட்டுள்ளார்.