சாத்தான்குளம் வழக்கில் முதலமைச்சரை விசாரிக்க உத்தரவிட முடியாது

மனு தள்ளுபடி... சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதலமைச்சரை விசாரிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த வியாபாரிகளான தந்தை, மகன், காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிபிசிஐடி வசம் இருந்த இந்த வழக்கு தற்போது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதலமைச்சரை விசாரிக்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ராஜாராமன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் முதலமைச்சரை விசாரிக்க உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.