ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர்

முதல்வர் வாழ்த்துச் செய்தி... ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ உளமார்ந்த வாழ்த்துகள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், நடிகர், நடிகைகளும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “திரு ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்