மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தலைமை செயலாளர் ஆலோசனை... தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் அதே சூழ்நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இ - பாஸ் முறையினை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதேபோன்று இ-பாஸ் முறையை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.