அரியலூரில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

அரியலூர் மாவட்டத்தில் ரூ.26.52 கோடி மதிப்பிலான பதினான்கு புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.36.73 கோடியிலான 39 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அரிச்சலூர் வளர்ச்சிப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் கூறியதாவது:- கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றியதால் கொரோனா பரவல் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசாங்கமே மக்களை தேடிச்சென்று குறைகளை தீர்த்து வருகிறது.

முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என முதலமைச்சர் கூறினார்.