கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

பிரிட்டன்: கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நதிம் ஜஹாவி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் குறியீட்டின் பொதுவான கொள்கைகளுக்கு அவர் போதிய அக்கறைக் காட்டவில்லை எனவும், நேர்மையான மற்றம் முன்மாதிரியான தலைவர் என்ற வகையில் மக்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர் லாரி, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கடிதத்தில் கல்விக்கான மாநில செயலாளராக நதிம் ஜஹாவி நியமிக்கப்படுவதற்கு முன் எச்எம்ஆர்சியின் விசாரணை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர் வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கத்திற்கான நியமனங்கள் செயல்பாட்டில் அவர் பல விடயங்களை வெளியிட தவறியுள்ளதாகவும் லாரி சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக எச்எம்ஆர்சியின் விசாரணை தன்மை அதன் விளைவு, அபராதம் உள்ளிட்ட விடயங்கள் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். இதனையடுத்து நதிம் ஜஹாவி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.