திருச்சியில் தெருக்கள் அடைக்கும் பணியை தொடங்கிய மாநகராட்சி

திருச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தெருக்கள் அடைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் திருச்சி மாநகரின் சில பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட தெருக்களை அடைக்கும் பணியினை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பாலக்கரை செங்குளம் காலனி, வரகனேரி மாமுண்டி சாமி கோவில் தெரு, தாரா நல்லூர் கம்பி போட்ட பிள்ளையார் கோவில் தெரு, அரியமங்கலம், பாலக்கரை பள்ளிவாசல் தெரு, உறையூர் ராமலிங்க நகர், கேகே நகரில் உள்ள அய்யப்ப நகர், ஜே கே நகர்.

பொன்மலைப்பட்டி காந்தி தெரு, நேரு தெரு, திருவரம்பூர் வின் நகர் ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சவுக்கு மற்றும் தகடுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள தஞ்சாவூர் சாலை, நெல்பேட்டை, மணி மண்டபம் சாலை அடைக்கப்படுகிறது.

இதேபோல் தர்பார் மேடை, பாலக்கரை ரோடு எடத்தெரு, வெல்லமண்டி ரோடு, மீன் மார்க்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு, பழக்கடை ஆகிய பகுதிகளை அடைக்கும் பணியும் துவங்கியுள்ளது..