சுகாதார அவசர நிலை வந்தால் எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்

குஜராத்: உலக நாடுகள் தயாராக இருக்கணும்... கொரோனாவை போல, இன்னொரு சுகாதார அவசரநிலை வந்தால் அதனை எதிர்கொள்ளவும், வரும் முன்பே தடுக்கவும் உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய அவர், ஆரோக்கியத்தின் அவசியத்தையும், ஒற்றுமையின் மதிப்பையும் கொரோனா உணர்த்தி விட்டதாக கூறினார்.

இந்தியாவில் சுகாதார உட்கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, பாரம்பரிய மருத்துவ முறைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

முழுமையான ஆரோக்கியமே உலக மக்கள் அனைவரின் விருப்பம் என்பதற்கு, சர்வதேச யோகா தினத்தின் உலகளாவியக் கொண்டாட்டமே சான்று என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.