இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் தற்போது 7,000 ஐ தாண்டி பதிவாகியுள்ளது

இந்தியா: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அவசர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அதிக மக்கள் கூடும் இடங்கள் மற்றும் விரைவில் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ள மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 9:30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. எனவே அதன்படி, புதிதாக 7,633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தினசரி நேர்மறை விகிதம் 3.62% ஆக உள்ளது. மேலும், வாராந்திர நேர்மறை விகிதம் 5.04% ஆக உள்ளது. இதையடுத்து கடந்த கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,11,029 கொரோனா உறுதி சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, 61,233 பேர் தற்போது தொற்று பாதித்து சிகிச்சை எடுத்து கொண்டு வருகின்றனர். மேலும், 6,702 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 749 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்தமாக நாட்டில் 220.66 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.