கைது ஆன இவா கைலியை பதவியிலிருந்து நீக்க முடிவு

கத்தார்: கைது ஆன இவா கைலியை பதவியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கத்தாரில் நடந்து வருகிறது உலக கோப்பை கால்பந்து போட்டி. இதனை காணவே உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஊழலில் சிக்கிய கிரீசின் அரசியல்வாதி இவா கைலியை ஐரோப்பிய நாடாளுமன்ற துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கத்தாரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும், கைலியின் வீட்டில் பணம் சிக்கியதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்ட இவா கைலி பிரஸ்ஸல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைலியின் வழக்கறிஞரோ அவர் நிரபராதி என கூறியுள்ளார். இத்தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.