புதிய சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை ரூ. 750 ஆக உயர்த்தியது .....மத்திய அரசு

தமிழகம் : கேஸ் சிலிண்டர் குறைந்த பட்சம் 5.5 கிலோ முதல் 33 கிலோ வரை எடையுடன் இருக்கும். கேஸ் சிலிண்டர் பொதுவாக யாரும் பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். இவை அனைத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே மாறியுள்ளது.

மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு தகுந்த மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக கேஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானர்.

அதன்படி, கொரோனா பாதிப்பு மற்றும் உக்ரைன் போர் காரணமாக பங்கு சந்தையில் நிலவரம் மிகவும் சரிவடைந்தது. இதனால் சமையல் எரிவாயு, எண்ணெய் மற்றும் தங்க நகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்த்தப்பட்டது.

அந்த வகையில், புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு தற்போழுது உயர்த்தியுள்ளது. இதன் மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூபாய் 750 அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வானது புதிதாக பெறப்படும் இணைப்புகளுக்கு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் 1,450 ரூபாயாக இருந்தது. தற்போது இது 2,200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 5 கிலோ சிலிண்டர் டெபாசிட் தொகையை 800 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.