நாடு முழுவதும் அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக.. ஸ்மிருதி இரானி

புதுடெல்லி: கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதா இல்லையா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.

இதை அடுத்து இதற்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி, நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கிய தகவலின் படி, ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளிலும் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.