PM Kisan திட்டத்தின் கீழ் தகுதியில்லாதவர்கள் பெற்ற பணத்தை திரும்ப வழங்கும்படி அரசு அறிவித்துள்ளது.

PM கிசான் திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் அனைவரும் நிதியுதவி வாங்கி பயனடைந்து வருகிறார்கள். இத்திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே ரூ.6000 வரைக்கும் நிதியுதவி பெற்று வருகின்றனர். முதல் தவணை நிதியுதவியை விவசாயிகளுக்கு ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்குள் அனுப்புகின்றனர். மேலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதத்திலும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் மாதத்திற்குள் விவசாயிகள் பெற்று வருகின்றன.

இதுவரைக்கும் விவசாயிகள் PM கிசான் திட்டத்தின் மூலமாக 11 தவணைகளில் நிதியுதவி பெற்றுள்ளனர். 11 ஆவது தவணை கடந்த மே 31 ஆம் தேதி தான் அனுப்பப்பட்டது. 10 ஆவது தவணை கடந்த ஆண்டு மே மாதம் 15 அன்று வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக கிட்டதட்ட 10 கோடிக்கும் அதிகமான ஏழை விவசாயிகள் உதவித்தொகை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் 11 ஆவது தவணை நிதியுதவி அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து, நடந்த விசாரணையில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திட்டத்தின் மூலமாக தகுதியில்லாமல் நிதியுதவி பெற்றவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பலன்களை அனுபவித்தவர்கள் உடனடியாக வாங்கிய நிதியுதவியை திரும்ப வழங்குமாறு வழங்கும்படி அரசு அறிவித்துள்ளது.