சென்னையில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்தது

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,287 ஆக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை 1,21,450 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,537 பேர் உயிரிழந்துள்ளனர். 1,06,626 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 12,287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்றைய நிலவரப்படி, கோடம்பாக்கத்தில் 1,470 பேரும், அண்ணா நகரில் 1,417 பேரும், அம்பத்தூரில் 1,339 பேரும், அடையாறில் 1.226 பேரும், வளசரவாக்கத்தில் 1,211 பேரும், ராயபுரத்தில் 749 பேரும், தண்டையார்பேட்டையில் 669 பேரும், தேனாம்பேட்டையில் 724 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.