ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியை அதிகரிக்க ஜப்பான் அரசு முடிவு

டோக்கியோ: ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியை அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடுகளான வடகொரியா மற்றும் சீனாவின் செயல்பாடுகளால் ஜப்பான் அவ்வப்போது பதற்றத்தை சந்தித்து வருகிறது. ஜப்பான் ராணுவ தலைமை அதிகாரி யோஷிஹிடே யோஷிடா செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போதுள்ள ராணுவத்தின் திறன்களால், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள முடியாது.

மேலும் நமது ராணுவ பலத்தை மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடாத வகையில் பலத்தை பெருக்க வேண்டும். அடுத்த கட்டமாக அமெரிக்காவின் அணு ஆயுத வியூகம் உள்ளிட்ட நமது பாதுகாப்பு திறன்களை அதிகரிப்பது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பாதுகாப்புத் துறைக்காக செலவிடப்படும் தொகையை 2027ஆம் ஆண்டுக்குள் ரூ.15 லட்சம் கோடியிலிருந்து சுமார் ரூ.24 லட்சம் கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.