வாட்ஸ்அப் செயலி வழங்கி வரும் லேட்டஸ்ட் அப்டேட்

இந்தியா: லேட்டஸ்ட் அப்டேட் .... வாட்ஸ்அப் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்தி கொண்டு வரும் தகவல் பரிமாற்ற செயலியாக உள்ளது. முன்னதாக மிகவும் குறைந்த அளவிலான டேட்டாவை மட்டுமே பகிர முடியும்.

ஆனால் தற்போது அதிகபட்சமாக 2 ஜிபி வரையிலான டேட்டாக்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் ஒரே செயலியில் பல்வேறு செயல்பாடுகள் செய்ய முடிவதால், பலரின் அபிமான செயலியாகவும் வாட்ஸ்அப் உள்ளது.

இதனை அடுத்து இந்நிலையில், வாட்ஸ்அப் சமீபத்தில் அதிக அளவிலான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதில் தற்போது படங்கள், வீடியோக்கள், GIF கள் மற்றும் டாக்குமென்ட்களை நமக்கு பிடித்த தலைப்புகளில் அனுப்ப அனுமதிக்கிறது.

இதையடுத்து இந்த பயன்பாடு முன்னதாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ios பயனர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.