சூறாவளியால் பாதித்த விளைநிலங்களை பார்வையிட்ட வடகொரியா அதிபர்

வடகொரியா: விளைநிலங்களை பார்வையிட்டார்... வடகொரியாவில் கனூன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு செய்தார்.

வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவிவரும் நிலையில், சேதமடைந்த பயிர்களை மீட்டெடுக்க, இராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அப்போது அவர் பாராட்டினார்.

இயற்கைப் பேரழிவுகளின் காரணமாக, அண்மைக் காலமாக வடகொரியா உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.

இந்த பிரச்சினை ஏற்படும் என்பதை, கொரோனா தொற்று பரவலின்போது, நாட்டின் எல்லைகளை வடகொரியா மூடியபோதே சர்வதேச வல்லுநர்கள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.