கோயம்புத்தூரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 894 ஆனது

கோவையில் நேற்று 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பொள்ளாச்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆலை தொழிலாளர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கோவையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 839 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 55 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, பொள்ளாச்சி ராமபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆலை தொழிலாளர்கள் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த 13 பேரும் வடமாநில தொழிலாளர்கள்.

மேலும், மதுக்கரை மில்ரோட்டில் உள்ள எலெக்ட்ரானிக் விற்பனையக பணியாளர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், 7 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள் ஆவர். மேலும், அன்னூர் முதலிபாளையம் பகுதியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 வயது சிறுமி, 6 வயதி சிறுவன், 13 வயது சிறுவன், 4 பெண்கள் மற்றும் 66 வயதுடைய ஆண் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, பாலமலை சாலையை சேர்ந்த 28 வயது, 18 வயது மற்றும் 53 வயது மூன்று ஆண்கள், 55 வயது 23 வயதான பெண்கள் இருவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கருப்பராயன் பாளையம் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண் 52 வயது பெண், விலாங்குறிச்சி அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்த 60 வயது ஆண்,

காளப்பட்டி மகாராஜா நகரை சேர்ந்த 50 வயது ஆண், இடையர் பாளையத்தை சேர்ந்த 66 வயது ஆண், பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை, 26 வயது பெண், 30 வயது ஆண் மற்றும் 22 வயது ஆண், குனியமுத்தூரை சேர்ந்த 6 வயது சிறுவன், சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த 34 வயது ஆண், பீளமேடு பி ஆர் புரம் பகுதியை சேர்ந்த 52 வயது ஆண், ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதன்படி கோவையில் நேற்று 36 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கோவையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 894ஆக உயர்ந்துள்ளது.