பிரேசிலில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா, இந்தியாவை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47 லட்சத்தைக் கடந்துள்ளது. நாளுக்கு நாள் பிரேசிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும் அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடைய சுமார் 5.12 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகளவில் கொரோனா வேகமாக பரவி வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பல்வேறு நாடுகள் இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்றவை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது.