கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்தது

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அசுரவேகத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தநிலையில், கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 4,764 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 55 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 27 ஆயிரத்து 239 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 1,780 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 47 ஆயிரத்து 690 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 55 பேர் கொரோனாவுக்கு பலியாகியதில் 15 பேர் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஆவர்.

பெங்களூருவில் மட்டும் 36 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று 2,050 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.