கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.. இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரஸால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று காலை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,583 ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 9,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா தொற்று 9 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. தொற்று நோய் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை 7,745 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 279 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 50 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக ஆறாவது இடத்தில் நாம் உள்ளோம்.

இந்த நிலையில் நம்பிக்கை தரும் செய்தியாக, இந்தியாவில் முதல் முறையாக கொரோனாவால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 1,35,206 நோயாளிகள் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். 1.33 லட்சம் நோயாளிகள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். வரும் நாட்களில் குணமடைவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.