உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.69 லட்சத்தை தாண்டியது

சீனா: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.69 லட்சத்தை தாண்டியது ... சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா நோய்த்தொற்றானது உலகநாடுகளிலில் பல லட்சம் மக்களை காவு வாங்கியது கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய்பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா முதல் அலை மற்றும் 2- ம் அலை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது.

எனினும் 228 உலக நாடுகள் கொரோனா தாக்கத்தின் காரணமாக பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தியும் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

மேலும் கொரோனா வைரஸ் ஆனது உருமாறி பரவி வருவதால் தற்போதும் பலர் நோய்த்தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போதைய கணக்கெடுப்பின்படி கொரோனா தாக்கத்தின் காரணமாக உலகமெங்கும் 65.69 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 629,278,875 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 608,340,958 பேர் குணமடைந்துள்ளது. 38,715 பேர் மோசமான நிலையில் மருத்துவனமயில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.