ஸ்ரீரங்கம் கோயிலில் சுண்ணாம்பு சுதை பெயர்ந்து விழுந்த பகுதியை ஆய்வு செய்த அதிகாரி

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் சுண்ணாம்பு சுதை பெயர்ந்து விழுந்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் அந்த பகுதியில் ஆய்வு செய்தார் .

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு தாமோதர கிருஷ்ணன் கோயில் கோபுரத்தின் சுண்ணாம்பு சுதையினால் கொடுங்கை இன்று அதிகாலை பெயர்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டது.

இதை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலா பண்பாட்டு & அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசன் அறிவுரைப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் அந்த பகுதியில் ஆய்வு செய்தார் .

அப்போது தகுந்த தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று மராமத்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின்போது தலைமையிட தலைமை பொறியாளர் இசையரசன், தலைமையிட செயற்பொறியாளர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ் திருச்சி மண்டல செயற்பொறியாளர் . தியாகராஜன் மற்றும் கோயில் பொறியாளர்கள் பிரிவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.