பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம்

ஜனாதிபதிக்கு அதிகாரம்... 20 ஆவது அரசியலமைப்பு திருத்ததிற்கு அமைய பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு குறைநிரப்பு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த திருத்தத்தில் மேற்கண்ட விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பிற்கு அமைய பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை வருடங்களின் பின்னரே அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது. எனினும், 20 ஆவது திருத்தத்தில் வெகுவான மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 19 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்குப் பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் திருத்தப்பட்டு அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.