திருமாவளவன் எழுப்பிய கேள்வி... அரசியல் வட்டாரத்தில் புகைச்சல்

சென்னை: 'மொத்த தியேட்டரும் ஒரு நபர் கையில் இருந்தால் என்ன ஆவது' என கேள்வி எழுப்பி உள்ளார் திருமாவளவன். இது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை எழுப்பி உள்ளது.


வாரிசு - துணிவு மோதல் தான் தமிழ் சினிமாவில் இருக்கும் ஹாட் டாபிக். யார் முதலில் வருவது, யாருக்கு தியேட்டர் அதிகம் கிடைக்கும் என பல பிரச்னைகளை ஓடிக்கொண்டிருக்கிறது.

இருப்பினும் இந்த இரண்டு படங்களுக்கு சம அளவிலான தியேட்டர்கள் வழங்கப்படும் என ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். விஜய் தான் பெரிய ஸ்டார், அவருக்கு அதிக தியேட்டர் கொடுக்கணும் என தயாரிப்பாளர் தில் ராஜு கேட்டாலும் நிலைமை மாறவில்லை.

இந்நிலையில் இரும்பன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், 'மொத்த தியேட்டரும் ஒரு நபர் கையில் இருந்தால் என்ன ஆவது' என கேட்டிருக்கிறார்.

திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுகிறார்கள். நான் யாருக்கும் எதிரா பேசவில்லை என கூறி இருக்கிறார் திருமாவளவன். இது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை எழுப்பி உள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.