இங்கு பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்

உத்தரபிரதேசம் : பள்ளி நேரம் மாற்றம் .... நவம்பர் மாத பிற்பகுதி முதல் பருவ நிலை மாற்றம் அடைந்து குளிர் அடிக்கிறது. அதிகபட்ச மழை காரணமாக நடப்பு ஆண்டில் குளிர் அளவு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. நாட்டின் வடக்கு பகுதி மாநிலங்களில் குளிர் அதிக அளவு இருந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில்,உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலையில் பனி மூட்டம் அதிக நேரம் நீடிக்கிறது.

இதையடுத்து இது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த வாரத்தில் 5 நாட்களுக்கு பனி மூட்டம் அதிகம் இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

இதனால் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் ராஜேஷ் குமார் ஸ்ரீவாஸ் காசியாபாத் நகரில் அரசு, தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து CBSE, ICSE பள்ளிகளும் மறு அறிவிப்பு வரும் வரை காலை 9 மணிக்கு தான் திறக்கப்படும்.

இதனை அடுத்து இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.