ட்விட்டர் பறவை பறந்தது... ஐகானாக நாய் வந்தது; எலான் மஸ்க் அதிரடி

நியூயார்க்: லோகோவை மாற்றிய எலான் மஸ்க்... ட்விட்டர் லோகோவாக பறவை இருந்தது இதனிடையே லோகோவாக நாய் ஐகான் மாற்றப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.

அதில் இருந்து டுவிட்டரில் அவர் அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது எலான் மஸ்க் டிவிட்டர் செயலியின் லோகோவை திடீரென மாற்றியுள்ளார்.

டிவிட்டர் செயலி அறிமுகமான காலகட்டத்தில் இருந்து லோவாக இருந்த நீல பறவை மாற்றப்பட்டு ஹோம் பேஜில் பறவை லோகோவுக்கு பதில் ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் முகத்தை லோகோவாக மாற்றியுள்ளார்.

பலரும் மீம்ஸ்களுக்கு உபோயோகிக்கும் ஷிபா இனு (சீம்ஸ்) முகத்தை வேடிக்கையான வகையில் டிவிட்டர் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளதால் இது குறித்து பயனர்கள் பலரும் எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.