50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை வீதம் குறைந்துள்ளது

நியூயார்க: வேலையின்மை குறைந்துள்ளது..., வேலையின்மை வீதம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.


தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஒகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை வீதம் 3.5 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. இது 1974ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மிகக் குறைவு.

எவ்வாறாயினும், ஊதியத்தில் சுருக்கம் நீடிக்கிறது, வழக்கமான ஊதியங்களின் உயர்வு, உயரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டால், வழக்கமான ஊதியத்தின் மதிப்பு 2.9 சதவீதம் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வழக்கமான ஊதியம், சலுகையைத் தவிர்த்து ஜூன் முதல் ஒகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஆண்டு வீதத்தில் 5.4 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு வெளியே காணப்படும் வழக்கமான ஊதியத்தில் இது வலுவான வளர்ச்சியாகும் என்று பிரித்தானிய புள்ளிவிபர அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஊதிய உயர்வு இன்னும் பணவீக்கத்தை விட பின்தங்கியுள்ளது. விலைகள் உயரும் வீதம் தற்போது 9.9 சதவீதம் ஆக உள்ளது.

வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை மீண்டும் குறைவதால், வேலை சந்தை உச்சத்தை எட்டியிருக்கலாம் என்பதற்கான மற்றொரு அறிகுறியும் இருந்தது. செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மதிப்பிடப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை 46,000 குறைந்து 1,246,000 ஆக இருந்தது. 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து கொவிட் தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியது, இருப்பினும் காலியிடங்களின் அளவு எல்லா நேரத்திலும் அதிகபட்சமாக உள்ளது.