மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 118.70 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் உயர்வு

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 11 ஆயிரத்து 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 303 க ன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என்று மொத்தம் 10 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது . இன்றும் அதே அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 118.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 118.76 அடியானது.

இதையடுத்து இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.