கொரோனாவால் தனிமைப்படுத்தபட்ட பகுதிகள் இல்லை; இராணுவ தளபதி தகவல்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது எதுவும் இல்லை... இலங்கையில் கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது எதுவும் இல்லை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்றை தடுப்பதில் சர்வதேச ரீதியில் பெற்ற இந்த வெற்றியை தொடர்ந்து நாம் தக்கவைத்துக்கொள்வது எமது கடமையாகும். எனவே எதிர்வரும் காலங்களில் நாட்டு மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு – 12 பண்டாரநாயக்க மாவத்தை வாழைத்தோட்டம் மற்றும் ஜா-எல, சுதுவெல்ல ஆகிய பகுதிகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டதாக தெரிவித்த அவர் அதற்கமைய, நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனை கிடைக்கும் வரை சுய தனிமை செயற்பாட்டை தொடர்ந்தும் பேணுமாறு இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.