கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

இந்தியா: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே நீடிக்கும் ... வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இதுதொடர்பாக ஆர்பிஐ ஆளுநர் கூறுகையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 6.50% ஆகவே தொடரும் என மும்பையில் நடைபெற்ற 3 நாள் நிதிக்கொள்கை கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ ஆளுநர் அறிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை. 2022 மே மாதம் முதல் இதுவரை 2.50% வரை கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததைவிட சற்று கூடுதலாக பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 6.44% ஆக இருந்தது. எனவே, ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்படாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகித்ததில் மாற்றமிருக்காது.