உணவு பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க இந்த நாடுகள் தான் காரணம்... அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவின் குற்றச்சாட்டு... உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் எனவும் அமெரிக்க கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன் குற்றம் சுமத்தியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளை நெருக்கும் சீனாவின் கடன் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.