கடும் குளிர், உணவு தட்டுப்பாட்டால் தவிக்கின்றனர்... தாலிபான் அரசு தகவல்

ஆப்கன்: உணவின்றி தவிப்பு... பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் ஆப்கானியர்கள், கடும் குளிர் மற்றும் உணவு தட்டுப்பாடால் அவதியுற்று வருவதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்ததால், பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கிவரும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக சேர்த்த சொத்துகளை ஆப்கானுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அவர்கள் ஆஃப்கன் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

முகாம்களில் போதிய உணவின்றி அவர்கள் அவதியுற்று வருவதாக தெரிவித்த தாலிபான் அரசு, ஆப்கானியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்துவிட்டது.