இன்று தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை : மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்க தொடங்கியது. இந்த நிலையில் தடுப்பூசி போடுவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி போட்டு இருப்பவர்களை மட்டுமே வேலைகளில் அனுமதிக்க வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.

எனினும் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் அரசு தடுப்பூசி செலுத்துவதை அறிவுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் 34 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று 35 வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இன்று தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், இதில் சென்னையில் மட்டும் 2000 இடங்களில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.இதையடுத்து பொதுமக்கள் வசதிக்காக அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதாவது, செப்டெம்பர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.