தக்காளி விலை இன்று சற்று குறைந்தது


சென்னை: அண்மைக்காலமாக நாடு முழுவதும் தக்காளியின் விலையானது உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையை பொருத்தவரை ஜூலை 1-ம் தேதி 1 கிலோ தக்காளி விலை 50 க்கு விற்பனை செய்து வந்த நிலையில் படிப்படியாக விலை அதிகரிக்க தொடங்கியது.

இதையடுத்து வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக விளைச்சல் குறைந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு தக்காளியின் வரத்தும் குறைய தொடங்கியது.

இதனால் அதன் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை நேற்று முன்தினம் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று 10 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் தக்காளியின் விலை மொத்த விற்பனையில் இன்று அதிரடியாக குறைந்து 135 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே சில்லறை விற்பனையில் 140 முதல் 150 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, நேற்று முன்தினம் 300 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு வருகை புரிந்த நிலையில் இன்று 400 டன் தக்காளி வரத்து வந்து உள்ளது.