தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்தை கடந்த சில வாரங்களாகவே குறைந்திருந்தது. எனவே இதன் காரணமாக தக்காளி விலை உச்சத்தை தொட்டிருந்தது. வட மாநிலங்களில் பெய்து வந்த கனமழையின் காரணமாக, தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தக்காளியின் விலை உயர்ந்தது.

எனவே இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனையானது நடைபெற்று வந்தது. கிலோ 60 ரூபாய்க்கு பொதுமக்கள் தக்காளியை வாங்கி சென்றனர்.

இதையடுத்து கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் மழை குறைந்து உள்ளதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியானது சில்லறை விற்பனையில் 100 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் 70 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு 700 டன் தக்காளி வந்து உள்ளதால் அதன் விலையும் குறைந்துள்ளது.