11 இலக்கத்தில் மொபைல் எண் ஒதுக்கீடு செய்ய ட்ராய் பரிந்துரை

தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 11 இலக்கத்தில் மொபைல் எண் ஒதுக்கீடு செய்ய தொலைதொடர்பு ஆணைய அமைப்பான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.

ட்ராய் அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போது வழங்கப்படும் 10 இலக்க எண்களுக்கு பதில், 11 இலக்க எண்களாக வழங்கலாம். தற்போது லேண்ட் லைன் பிக்சட்கனெக்‌ஷன்கள் மூலம் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன்பூஜ்யத்தைப் பயன்படுத்தலாம். இப்படி 11 இலக்க எண்களாக மாற்றும் போது புதிய கனெக்‌ஷன்களுக்கு தொடர்பு எண்கள் வழங்குவது எளிதாக இருக்கும்’’ என்று ட்ராய் கூறியுள்ளது.

இந்த கொள்கைப்படி எண்கள் ஒதுக்கப்பட்டால், 1000 கோடி எண்கள் வழங்க முடியும். அதில் இந்தியாவின் தேவை 70 சதவீதம் பூர்த்தியானால் கூட, மீதம் 700 கோடி எண்கள் இருக்கும் என்று ட்ராய் கூறியுள்ளது. மேலும், டாங்கிள்களுக்கு வழங்கப்படும் 10 இலக்க எண்களை 13 இலக்க எண்களாக வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரை செய்யப்பட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்தியாவில் பல கோடி மக்கள் பயன் பெறுவார்கள்.