நிதி இல்லாத காரணத்தினால் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க முடியவில்லை - மத்திய அரசு

நாடு முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டி-யை நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜிஎஸ்டி-யை நடைமுறைக்கு கொண்டு வந்ததால் மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் நிலையில், அதனை சரி கட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது. தற்போது மத்திய அரசு சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை சரியாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூவர்மாக வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசுகளுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. இந்தத் தொகை 2020 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான பாக்கித் தொகையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் அறிக்கையில், மத்திய அரசிடம் நிதி இல்லாத காரணத்தினால் வழங்க முடியவில்லை. ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருப்பதால் தற்போது கொடுக்க இயலாது. குறைவான வசூல் காலத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டுமா? என்ற சட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு சுமார் 11,600 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. கொரோனா காரணமாக நிதி பற்றாக்குறையால் சிக்கியுள்ள மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டை விடுவிக்கக்கோரி வலியுறுத்தி வருகிறது.