சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு... இளைஞர்கள் தவிப்பு

சீனா: வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு... சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி வழிபாட்டுத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சீனாவில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பொருளாதார நிலை சற்று மந்தநிலையில் காணப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சீனா பின்பற்றிய ஜீரோ கோவிட் பாலிசி மூலம் தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள் முழுமையான ஊரங்குப்படுத்தப்பட்டது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல், நாட்டில் பட்டதாரிகளை விட முதுநிலை மற்றும் பிஎச்டி படித்தவர்கள் அதிகம். இதன் காரணமாக அவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத சூழல் உள்ளது. நாட்டின் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பெரும் துயரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, சீன இளைஞர்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்தவும், நல்ல வேலை தேடவும் வழிபாட்டுத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கோவிலுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 310 சதவீதம் அதிகரித்துள்ளது.