மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

இந்தியா: இன்று காணொலி வாயிலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ....மத்திய நிதியமைச்சகத்திற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான பரிந்துரை மற்றும் முக்கிய முடிவுகள் பற்றிய ஆலோசனை மேற்கொள்ளும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெறவுள்ளது.

51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதையடுத்து இதில் ஒவ்வொரு மாநில அரசின் சார்பில் நிதி அமைச்சக முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த 51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது ஆன்லைன் சூதாட்டம் , கேம்பளிங், குதிரை பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் 28 சதவீதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில்,

இதில் உள்ள சிக்கல்கள், எவ்வாறு நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.