ஆஸ்திரேலியாவின் தனித்துவ உயிரினம் பிளாடிபஸ் பூங்காவில் விடப்பட்டது

ஆஸ்திரேலியா: தேசிய பூங்காவில் விடப்பட்ட பிளாடிபஸ்... ஆஸ்திரேலியாவின் தனித்துவ உயிரினமான பிளாடிபஸ், அந்நாட்டின் பழமையான தேசியப் பூங்காவில் விடுவிக்கப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசின் கூற்றுப்படி 1970களுக்குப் பின் ராயல் தேசியப் பூங்காவில் பிளாடிபஸ்கள் காணப்படவில்லை. வசிப்பிட அழிவு, நதி சீரழிவு, வேட்டையாடுதல் மற்றும் வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தால் இவை பேரழிவைச் சந்தித்தன.

இதனால் பழமையான தேசியப் பூங்காவில் சுமார் 50 ஆண்டு காலம் குறிப்பிட்ட உயிரினம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து மற்ற இடங்களில் இருந்து தருவிக்கப்பட்ட பிளாடிபஸ்கள் ராயல் தேசியப் பூங்காவில் விடுவிக்கப்பட்டன.