முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி; மத்திய அரசு அறிவிப்பு

முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி... கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்துவதற்காக 3 தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று பேசிய மத்திய சுகாதார இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, கொரோனாவுக்கு தடுப்பூசியை கொண்டு வருவதில் நமது விஞ்ஞானிகள் கடினமாக உழைத்து வருகிறார்கள் என்றார்.

நாம் அதில் வெற்றி பெற்று விட்டால், கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்” என குறிப்பிட்டார்.

எனவே தடுப்பூசி வந்த உடன் முதலில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார சார்பு பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என தெரிய வந்துள்ளது.