விமர்சனத்துக்குள்ளான வேலூர் சாலைகள்..உதவிப் பொறியாளர் சஸ்பெண்ட்.. மேயர் விளக்கம்!

தமிழ்நாடு: வேலூர் மாநகராட்சியில், டூ வீலர், ஜீப்பை அகற்றாமல் சாலைப் போடப்பட்ட விவகாரத்தில் உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை குறித்து மேயர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதனை பலர் கிண்டல் செய்து வந்தனர்..தூங்கி எழுந்த மக்கள் இதனை பார்த்து பலர் சிரித்தனர் பலர் கேள்வி கேட்டனர்.

`ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சுமார் 1,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வேலூர் மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சரியான திட்டமிடல் இல்லாமல் அவசர அவசரமாக வேலைகள் நடப்பதால், கோடி கோடியாகப் பணம் விரயமாவதுடன், ஏகப்பட்ட முறைகேடுகளும் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை. அவசரகதியில் ஏடாகூடமாகப் பள்ளம் தோண்டி அரைகுறையாகவிட்டதால், நிறைய விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.