உணவின்றி தவித்த தெருநாய்களுக்கு உதவிய கால்நடை மருத்துவர்கள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன்-ல், சில கால்நடை மருத்துவர்கள் இணைந்து கொரோனா ஊரடங்கால் உணவு இல்லாமல் தவித்த தெரு நாய்களுக்கு சிகிச்சை அளித்தும், உணவளித்தும் வருகின்றனர்.

தலைநகர் ப்ரீடவுனில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், உணவகங்களில் இருந்து அகற்றப்படும் மீத உணவுகளை உண்டு வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் உணவகங்கள் மூடப்பட்டதால், உணவின்றி தவித்து வந்தன.

இதையடுத்து, பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நாய்களுக்கு உணவளித்து வரும் மருத்துவக் குழுவினர், ஏராளமான நாய்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதன் மூலம், நோய்வாய் பட்ட நாய்களால் மனிதர்கள் கடிபடுவதும் தடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.