ஐந்து தலை சுறா ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுக்கும் வீடியோ வைரல் - உண்மை பின்னணி என்ன ?

தற்போது சமூக வலைதளங்களில் கடலில் இருந்த அபாயகரமான உயிரினம் ஒன்று ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுக்கும் காட்சி அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 15 நொடிகள் ஓடுகிறது

சில இளைஞர்கள் படகு ஒன்று மீது இருந்து தங்களை காப்பாற்ற வந்த ஹெலிகாப்டரை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் போது, திடீரென கடலில் இருந்து வெளியேறும் அபாயகரமான உயிரினம் ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுப்பது போன்று வைரல் வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 7.5 கோடி செலவிட்டு வாங்கியதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அது 5 headed shark எனும் திரைப்படத்தின் டிரெயிலர் காட்சிகள் என தெரியவந்துள்ளது.

இதன் மூலம் இந்த வீடியோவை தனியார் தொலைகாட்சி நிறுவனம் சுமார் 7.5 கோடி செலவிட்டு வாங்கவில்லை என தெரியவந்துள்ளது. கடலில் ஐந்து தலை சுறா மீன் ஒன்று ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ படத்தில் வந்த காட்சி என தெரிய வந்துள்ளது.