ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டாரா?

ஜப்பான்: முன்னாள் பிரதமர் சுடப்பட்டாரா?... ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் ஆற்றிய உரையின் போது மயங்கி விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தளத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும், அபேவுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது காணப்பட்டதாகவும் ஜப்பானின் NHK வேர்ல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷின்சோ அபே உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்த உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்தும்போது மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொது ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும் இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் NHK தெரிவித்துள்ளது. முன்னாள் ஜப்பான் பிரதமர் சுயநினைவில் இல்லை என்றும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஜப்பானில் ஒரு தேர்தல் பிரச்சார நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஷின்சோ அபே மேடையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர் மயங்கி விழுந்த அதே நொடியில் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கப்பட்டுள்ளது. ஷின்சோ அபே இரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் இந்த சம்பவம் குறித்தும், ஷின்சோ அபேவின் உடல் நிலை குறித்தும் தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை. ஆளும் லிபரல் டெமாக்ரடிக் (LDP) கட்சியின் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்து அவர் அதன் முக்கிய பிரிவுகளை கட்டுக்குள் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.