அடுத்து வரும் சில நாட்களுக்கான வானிலை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும் மதுரை விமான நிலையத்தில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று காலை வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி கொண்ட வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 15ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 21 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 19ஆம் தேதி வரை சூறாவளி காற்று அதிக வேகத்தில் வீச உள்ளது. இதனால் இன்றும், நாளையும் மீனவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள இடங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுவதாக வானிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.