அடுத்து வரும் சில நாட்களுக்கான வானிலை நிலவரம்


சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 13 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் பெய்யும்.

இதனை அடுத்து கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடலின் குறிப்பிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று 55 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.